Thursday, November 21, 2019

புனற்பாக கஞ்சி


புனற்பாக முத்தோடம் போக்கு மருந்தின்
அனற்பாகந் தன்னை யடக்குந்தனிக்குணங்கள்
அம்மட்டோ? வாய்க்கிதமா மாரோக்கி யங்கொடுக்குங்
கம்மிட்ட பூவனமே! காண்” - அகத்தியர் குணபாடம்

செய்முறை:  தேவையான அளவு தண்ணீரில் 35 கிராம் அரிசியை இரண்டு முறை கொதிக்க வைத்து வடிகட்டி கொஞ்சம் பனை வெல்லமும் (5-10 கிராம்) ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
பயன்:  இக்கஞ்சியை உட்கொள்வதனால் வெள்ளை நோய், நீர் சுருக்கு நீங்கும். முக்குற்றங்களும் சமப்படும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். பெரும் மருந்துகள் உட்கொள்ளும் போது ஏற்படும் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும்.

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.