வளி, அழல், ஐயம் போன்றவற்றை ஒவ்வொரு கலத்திலும் நடைபெறும் வளர்ச்சி மாற்றம் (Anabolism), சிதைவு மாற்றம் (catabolism), வளர்சிதைவு மாற்றம் (Metabolism) ஆகியவைகளுடன் ஒப்பு நோக்கலாம். இங்கு வளி, அழல், ஐயம் உடம்பில் உள்ள நரம்புக் கல கடத்திகளுடன் (Neuro transmittors) அதனுடன் தொடர்புடைய நொதியங்களுடனும் (Enzymes) ஒப்பு நோக்கப்பட்டுள்ளது.
நமது உடலில் எண்ணற்ற நரம்புக்கல கடத்திகள் உள்ளன. இவைகள் மிகவும் முக்கியமான உடலின் பல்வேறு செயல்பாடுகளில் பங்கு பெறுபவை Acetylcholine, Catecholamines, Histamine ஆகியவை. இவை மூன்றும்தான் உடலின் சுற்றுப்புற செயல்பாடுகளில் மூளையின் பகுதியில் செயல்படுபவை ஆகும்.
இம்மூன்றையும் நமது முக்குற்றத்திற்கு ஒப்பிட்டு ஆய்வுசெய்கையில்,
வளி - Acetylcholine - The chemical compound acetylcholine (often abbreviated ACh) is a neurotransmitter in both the peripheral nervous system (PNS) and central nervous system (CNS) in many organisms including humans.
அழல் - Catecholamines - Catecholamines are sympathomimetic "fight-or-flight" hormones released by the adrenal glands in response to stress. They are part of the sympathetic nervous system.
ஐயம் - Histamine -Histamine is an organic nitrogen compound involved in local immune responses as well as regulating physiological function in the gut and acting as a neurotransmitter.
வளி - Cholinesterase - In biochemistry, cholinesterase is a family of enzymes that catalyze the hydrolysis of the neurotransmitter acetylcholine into choline and acetic acid.
அழல் - Monoamino oxidase - MAO are a family of enzymes that catalyze the oxidation of monoamines.
இவற்றுடன் ஒற்றுமைப்படுத்தப்பட்டுள்ளது.
Banras Hindu University இல் உடலில் குருதி, மூளைப்பகுதியில் மேலே குறிப்பிட்ட நரம்புக்கல கடத்திகளை ஆய்வு செய்து அவற்றின் இயல்பு நிலைகளை (Normal values) குறித்துக்கொண்டனர். பின்னர் சில தனி மூலிகை மருந்துகளை கொடுத்து மேற்கூறிய Neuro humor அளவை ஆராய்ந்தார்கள்.
இந்த ஆய்வானது மூலிகைகள் வளி, அழல், ஐயம் என்ற முக்குற்றங்களை எவ்வாறு அதிகரிக்கின்றது அல்லது குறைக்கின்றது என்பதை நிடரூபிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மூலிகைகள் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், அமுக்கிராய், வாகை மற்றும் சந்தனம்.
வளி - Acetyl choline - Cholinesterase
அழல் - Catecholamines - Monoamino oxidase
நெல்லிக்காய், அமுக்கிராய் ஆகிய மருந்துகளை தனித்தனியே உட்கொள்ளச் செய்து ஆய்வு செய்யும் போது குருதி, மூளையில் உள்ள Catecholamines மிகவும் குறைகிறது. மேலும் இது Acetylcholine அளவை அதிகரிக்கின்றது. இங்ஙனம் அழலிற்கு தொடர்பான Catecholamines ஐ குறைப்பதால் இவற்றை அழல் பிணிக்குக் கொடுக்கலாம் என்ற முடிவு பெறப்பட்டது.
வாகையானது (Albizza lebback) மூளை, குருதியில் உள்ள Acetylcholine அளவை மிகவும் குறைக்கின்றது. மேலும் குருதி மற்றம் மூளையில் உள்ள Histamine, Catecholamines அளவுகளை அதிகரிக்கின்றது.