இப்படியும் அர்த்தம் உண்டாம்,
காயகற்ப மூலிகைகள் ஐந்து.
உடலை இளமை மிடுக்குடன் வைத்திருக்க ஒளவைப்பிராட்டியார் தனது செய்யுளில் காயகற்ப மூலிகைகளை பற்றி கூறியுள்ளார்.
" வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - "பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு."
தும்பிக்கையுடைய விநாயகரை துதிப்பவர்க்கு வாக்குவன்மையும், மனோபலமும், இலக்குமி கடாட்சமும், உடலும் வாடாது. இது சாதாரனமாக கொள்வது.
இதன் உட்கருத்து, (ஒழுக்கத்துடன் இருந்து) உடலை நெடுநாள் வரை மூப்பின்றி, பிணியின்றி வைத்திருப்பதற்கான கற்ப மூலிகைகளை கூறும் செய்யுளாகும்.
இங்கு,
பூ என்பது வெண்தாமரைப்பூ
மேனி என்பது குப்பை மேனி
தும்பி என்பது தும்பை செடி
கையான் என்பது கரிசலாங்கண்ணி
பாதம் என்பது செருப்படை
மேற்கூறப்பட்ட ஐந்து மூலிகைகளும் காயகல்ப மூலிகைகளாகும். அதாவது இச்செய்யுளின் உட்கருத்து இதுவென குறிப்பிடப்படுகின்றது.
இதனை பயன்படுத்தும் முறை,
வெண்தாமரைப்பூ இதழ் -450g
குப்பைமேனி இலை -700g
தும்பை சம்மூலம் -560g
கரிசலாங்கண்ணி இலை -300g
செருப்படை இலை -280g
எல்லாவற்றையும் தனித்தனியாக உலர்த்தி சூரணம் செய்து, ஒரு வேளை 3g வீதம் காலை, மாலை தேனில் குழைத்து சாப்பிட்டு பசும்பால் 200ml குடிக்கவும். தொடர்ந்து 48 நாட்கள் கற்பம் உண்ணவும்.
பத்தியம்
மருந்து முடியும் வரை பால் சாதம், மலைவாழைப்பழம் சாப்பிடவும்.
அதிக அலைச்சல், கடும்வெயிலில் திரிதல், மழையில் நனைதல் கூடாது.
மூன்று மாதம் பெண் சேர்க்கையை தவித்தல் வேண்டும்.
நன்றி : Dr சிற்சபை,சித்த மருத்துவம். திங்கள் இதழ், 01.04.1985, இதழ் 12.
2 comments:
சித்த மருத்துவம் இதழ்கள் கிடைக்குமா?
மே 1984 - சித்திரை 1985 வரை உண்டு. தங்களுக்கு ஏதேனும் பகுதி தேவையெனின் whats app number தரவும். பிரதிபண்ணி அனுப்புகின்றேன். எனது இல +94777774600.
Post a Comment