Friday, December 30, 2011

“செகராச சேகரத்தில்” வாதரோகங்கள்……01


யாழ்ப்பாணத்தில் செகராச சேகரன், பரராசசேகரன் போன்ற மன்னர்களின் ஆட்சிக்காலம் சிறப்பான வளமான காலமாகும். அதிலும், சித்தமருத்துவத் துறை இவர்களது மிகச் சிறப்பாக இருந்துள்ளது. இதில் சிறப்பு என்னவெனில் மேற்படி மன்னர்களே மருத்துவர்களாக இருந்து மருத்துவம் செய்துள்ளார்கள்.

மருத்துவம் செய்தது மட்டுமன்றி மருத்துவ நூல்களையும் எழுதியுள்ளார்கள். இவற்றில் பரராசசேகரம், செகராசசேகரம் நூல்கள் சிறப்பானவை.

செகராசசேகரத்தில் உள்ள வாதரோகங்கள் தொடர்பான பாடல்களையும் அவற்றின் விளக்கங்களையும் தொடராக இத்தளத்தில் காணலாம். விளக்கங்கள், சித்தமருத்துவர் நாகரத்தினம் கணேசலிங்கநாதன் என்பவரால்  எழுதப்பட்ட “செகராசசேகர வைத்தியத் திறவுகோல்” எனும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

“ஆரணமறைக்குமெட்டா அருளொளியான மூர்த்தி


பூரணமறையாயந்நாட் புகன்றவாயுறு வேதத்தின்


சீரணிவாதமெண்பத் தைந்த்தின் சிறப்பும்பேரும்


ஏரணியுலகின்மீது அறிந்தவையியம் பலுற்றாம்”

வேதங்களால் கண்டறிய முடியாத அருள் ஒளிமயமான சிவன் முன்நாளில் கூறிய ஐந்தாம் வேதம் என்று போற்றக் கூடிய ஆயுள்வேதத்தில் கூறியபடி வாதரோகம் எண்பத்தைந்தாகும். இவற்றின் சிறப்புக்களையும் தன்மைகளையும் இந்த உலக மக்களின் நன்மைகருதி அவற்றைச் சொல்லிடுவோம்.

தொடரும்………..

Wednesday, December 28, 2011

சித்த மருத்துவத்தில் நோயனுகா விதி (Preventive care in Siddha Medicine) 
http://www.scribd.com/doc/37593032/Preventive-Care-in-SiddhaMedicine

Thursday, December 22, 2011

பிரக்கிருதி (Body Constitution)

சித்தர்கள் -- Ernst Kretschmer - William Herbert Sheldon


மனிதனின் உடல் அமைப்பினை சித்தர்கள்
வளி, அழல், ஐயம் என்பவற்றை அடிப்படையாக
கொண்டு வகைப்படுத்தி உள்ளனர்.
முத்தோசங்களுக்கு அமைவாகவே அவர்களது
உடலமைப்பும், குண இயல்புகளும் அமைகின்றன. முத்தோசங்களை அடிப்படையாக கொண்டு
பிரதானமாக மூன்று கிரக்கிருதிகளும், தோசங்களின் கலப்பினால் ஏனைய உலமைப்புக்களும் காணப்படுகின்றன.
இவ் உடலமைப்புக்கள் சிகிச்சை முறையில் பிரதான பங்கினை
வகிக்கின்றன. பிரக்கிருதிக்கு ஏற்ற வகையில் மனிதனது
பழக்கவழக்கங்கள் அமையுமாயின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

     சித்தர்களால் கூறப்பட்ட உடலமைப்புக்களின்
குண இயல்புகள் தற்கால உளவியலாளர்களின்
(Ernst Kretschmer , William Herbert Sheldon) உடலமைப்புக்களின்
குண இயல்புகளுடன் ஒத்தாக காணப்படுகின்றமை ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல.


ஒற்றுமைப்பாடுகள்:

 1.சித்தர்கள்   ---     2.Ernst Kretschmer  ---    3.William Herbert Sheldon
1..வளி உடல்  --------- --2.Asthenic    ------------    3.Ectomorphic
இயல்புகள் - மெல்லிய உடல், மெல்லிய அவயங்கள்,
குறைந்த கொழுப்பு திடமற்ற மனவியல்பு.

1.அழல் உடல்  --------  2.Athletic   --------------   3.Mesomorphic 
இயல்புகள் - திடகாத்திரமன உடல், அளவான என்புகள்,
குறைந்த கொழுப்பு, அகன்ற தோள், மெலிந்த இடுப்பு,
நட்பானவர்கள், ஆளுமையுள்ளவர்கள்.

1.ஐய உடல்--------------2.Pyknic  ----------------- 3.Endomorphic
இயல்புகள் - அதிக கொழுப்பு, அகன்ற இடுப்பு,
பெரிய என்புகள், சோம்பல்.


Ernst Kretschmer (October 8, 1888  - February 8, 1964)
Prof. Dr. med. Dr. phil. h.c., was a German psychiatrist
who researched the human constitution and established
a typology. In 1929 Kretschmer was nominated for the
Nobel Prize in Physiology or Medicine.
William Herbert Sheldon (1940) American psychologist ,
associating body types with human temperament types.

Monday, December 19, 2011

சிங்கை (சங்கானை,யாழ்ப்பாணம்) அரசர்களின் அறுவை மருத்துவமும் நமது அறுவையும்....
செகராச சேகரன் என புகழ் பெற்ற செயவீரன், செகராச சேகரம் 2000, செகராசசேகரமாலை, தட்சிணகைலாசபுராணம் எனும் நூல்களை இயற்றியவர். இவற்றில் செகராசசேகரம் அறுவை மருத்துவம் பற்றி குறிப்பிடுகின்றது. பரராச சேகரன், பரராசசேகரம் 12000 பாடல்களைக் கொண்ட மருத்துவ நூலை இயற்றியவன். இவ்விரு அரசர்களது அறுவை மருத்துவம் தொடர்பாக பாவித்த கத்திகள் இவற்றினை பயன்படுத்தம் முறைகள் பற்றிய முறைகள் பற்றி "சிங்கை அரசர்களின் அறுவைமருத்தவம்" எனும் நூலில் இவர்களது வழித்தோன்றல் மருத்துவரான இராஜசேகரம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வரசர்கள் மருத்துவ குழு அமைத்து மருத்துவ துறையை பராமரித்து வந்துள்ளார்கள். கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டளவிலேயே அறுவை மருத்துவர்கள் உடற்சகூற்றிரலை, செகராசசேகரன் வாள் போர்க்களத்தில் வெட்டி வீழ்த்திய வடக்கர்களின் உடலைக் கீறி உறுப்புக்களை அளந்து, ஆராய்ந்து ஐயம் சிறிதுமின்றி கற்றுள்ளார்கள். இதில் கவனிக்கப்பட கூடியது, வன்மத்தில் அங்குசத்தினால் குத்தி விறைக்கப் பண்ணி நோயாளிக்கு வலியின்றி அறுவைச் சிகிச்சையை செய்துள்ளார்கள்.
தமிழ் மரத்துவர்களை பரிகசித்த அமெரிக்க மிசனரி மருத்துவர்கள் பின்னர் அவர்களை பார்த்து வியந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்க மிசனரி தலைமை மருத்துவரும், மானிப்பாய் ஆங்கில மருத்துவக் கல்லூரியின் அதிபரும், ஆங்கில வைத்தியசாலையின் தலைமை மருத்துவரும் ஆன கிறீன் தமிழ் மருத்துவரும் சிங்கை அரசர்களில் ஒருவருமான இராச குலசேகரனை பாராட்டியதுடன், அவரிடமிருந்து தமிழ் மருத்துவத்தையும் கற்றுள்ளார். இவ்வாறு அறிவியல் நிறைந்த தமிழ் மருத்துவம் தமிழர்கள் தமது துறைகளை பேணாததாலும், தேசிய உணர்வு இன்மையாலும் நலிவடைந்து போயுள்ளது. இன்று பல்கலைகழக தரத்தை பெற்ற சித்த மருத்துவ கல்வி இருந்தும் போதிய தேடல், அரச அனுசரனை போதியளவு இல்லாததாலும், மருத்துவர்களின் பணம் தேடும் நோக்காலும் சிதைந்து கொண்டு போகின்றது. மேலைத்தேச நாடுகளில் தமிழ் மருத்துவம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. மேலைத்தேச மருத்துவர்கள் தமிழ் மருத்துவத்தை கற்றுக்கொள்கின்றார்கள்.
ஆனால் எமது நாட்டில் தமிழ் மருத்துவம் போலியானது என்று கூறும் நிலையிலேயே தமிழ் அலோபதி மருத்துவர்கள் உள்ளார்கள்,இவ் அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவம் கற்றவர்களுக்குதான் சித்த மருத்துவத்தில் உரிமை உண்டு, தமக்கும் சித்தமருத்துவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றே நினைக்கின்றார்கள். ஆனால் அவர்களும் தமிழர்களே, அவர்களுக்கும் உரியதுதான் தமிழ் மருத்துவம். சித்தமருத்துவர்களுக்கு அலோபதி மருத்துவத்தின் சில பகுதிகளை அறிவுக்காக போதிப்பது போல், தமிழ் அலோபதி மருத்துவர்களுக்கும் அதன் சில அடிப்படைகளை போதிக்கப்படல் வேண்டும். இவ்வாறான கூட்டு முயற்சிகளினாலேயே எமது மருத்துவத்தின் பயன்களை நாம் பெற்றுக்கொள்ளலாம். இல்லையேல் நாம் எமது மருத்துவத்தையும் மேலைத்தேசத்தவரிடம் இருந்து மொழிபெயர்க்க வேண்டிய நிலையே ஏற்படும்.

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.