Monday, December 19, 2011
சிங்கை (சங்கானை,யாழ்ப்பாணம்) அரசர்களின் அறுவை மருத்துவமும் நமது அறுவையும்....
செகராச சேகரன் என புகழ் பெற்ற செயவீரன், செகராச சேகரம் 2000, செகராசசேகரமாலை, தட்சிணகைலாசபுராணம் எனும் நூல்களை இயற்றியவர்.
இவற்றில் செகராசசேகரம் அறுவை மருத்துவம் பற்றி குறிப்பிடுகின்றது. பரராச சேகரன், பரராசசேகரம் 12000 பாடல்களைக் கொண்ட மருத்துவ
நூலை இயற்றியவன். இவ்விரு அரசர்களது அறுவை மருத்துவம் தொடர்பாக பாவித்த கத்திகள் இவற்றினை பயன்படுத்தம் முறைகள் பற்றிய
முறைகள் பற்றி "சிங்கை அரசர்களின் அறுவைமருத்தவம்" எனும் நூலில் இவர்களது வழித்தோன்றல் மருத்துவரான இராஜசேகரம் தனது நூலில்
குறிப்பிட்டுள்ளார்.
இவ்வரசர்கள் மருத்துவ குழு அமைத்து மருத்துவ துறையை பராமரித்து வந்துள்ளார்கள். கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டளவிலேயே அறுவை மருத்துவர்கள்
உடற்சகூற்றிரலை, செகராசசேகரன் வாள் போர்க்களத்தில் வெட்டி வீழ்த்திய வடக்கர்களின் உடலைக் கீறி உறுப்புக்களை அளந்து, ஆராய்ந்து ஐயம் சிறிதுமின்றி கற்றுள்ளார்கள்.
இதில் கவனிக்கப்பட கூடியது, வன்மத்தில் அங்குசத்தினால் குத்தி விறைக்கப் பண்ணி நோயாளிக்கு வலியின்றி அறுவைச் சிகிச்சையை செய்துள்ளார்கள்.
தமிழ் மரத்துவர்களை பரிகசித்த அமெரிக்க மிசனரி மருத்துவர்கள் பின்னர் அவர்களை பார்த்து வியந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்க மிசனரி தலைமை மருத்துவரும்,
மானிப்பாய் ஆங்கில மருத்துவக் கல்லூரியின் அதிபரும், ஆங்கில வைத்தியசாலையின் தலைமை மருத்துவரும் ஆன கிறீன் தமிழ் மருத்துவரும் சிங்கை அரசர்களில் ஒருவருமான
இராச குலசேகரனை பாராட்டியதுடன், அவரிடமிருந்து தமிழ் மருத்துவத்தையும் கற்றுள்ளார்.
இவ்வாறு அறிவியல் நிறைந்த தமிழ் மருத்துவம் தமிழர்கள் தமது துறைகளை பேணாததாலும், தேசிய உணர்வு இன்மையாலும் நலிவடைந்து போயுள்ளது. இன்று பல்கலைகழக
தரத்தை பெற்ற சித்த மருத்துவ கல்வி இருந்தும் போதிய தேடல், அரச அனுசரனை போதியளவு இல்லாததாலும், மருத்துவர்களின்
பணம் தேடும் நோக்காலும் சிதைந்து கொண்டு போகின்றது.
மேலைத்தேச நாடுகளில் தமிழ் மருத்துவம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. மேலைத்தேச மருத்துவர்கள் தமிழ் மருத்துவத்தை கற்றுக்கொள்கின்றார்கள்.
ஆனால் எமது நாட்டில் தமிழ் மருத்துவம் போலியானது என்று கூறும் நிலையிலேயே தமிழ் அலோபதி மருத்துவர்கள் உள்ளார்கள்,இவ் அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவம் கற்றவர்களுக்குதான்
சித்த மருத்துவத்தில் உரிமை உண்டு, தமக்கும் சித்தமருத்துவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றே நினைக்கின்றார்கள். ஆனால் அவர்களும் தமிழர்களே,
அவர்களுக்கும் உரியதுதான் தமிழ் மருத்துவம். சித்தமருத்துவர்களுக்கு அலோபதி மருத்துவத்தின் சில பகுதிகளை அறிவுக்காக போதிப்பது போல், தமிழ் அலோபதி மருத்துவர்களுக்கும்
அதன் சில அடிப்படைகளை போதிக்கப்படல் வேண்டும். இவ்வாறான கூட்டு முயற்சிகளினாலேயே எமது மருத்துவத்தின் பயன்களை நாம் பெற்றுக்கொள்ளலாம். இல்லையேல் நாம்
எமது மருத்துவத்தையும் மேலைத்தேசத்தவரிடம் இருந்து மொழிபெயர்க்க வேண்டிய நிலையே ஏற்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Challenges & opportunities
Post a Comment