“செகராச சேகரத்தில்” வாதரோகங்கள்……01
யாழ்ப்பாணத்தில் செகராச சேகரன், பரராசசேகரன் போன்ற மன்னர்களின் ஆட்சிக்காலம் சிறப்பான வளமான காலமாகும். அதிலும், சித்தமருத்துவத் துறை இவர்களது மிகச் சிறப்பாக இருந்துள்ளது. இதில் சிறப்பு என்னவெனில் மேற்படி மன்னர்களே மருத்துவர்களாக இருந்து மருத்துவம் செய்துள்ளார்கள்.
மருத்துவம் செய்தது மட்டுமன்றி மருத்துவ நூல்களையும் எழுதியுள்ளார்கள். இவற்றில் பரராசசேகரம், செகராசசேகரம் நூல்கள் சிறப்பானவை.
செகராசசேகரத்தில் உள்ள வாதரோகங்கள் தொடர்பான பாடல்களையும் அவற்றின் விளக்கங்களையும் தொடராக இத்தளத்தில் காணலாம். விளக்கங்கள், சித்தமருத்துவர் நாகரத்தினம் கணேசலிங்கநாதன் என்பவரால் எழுதப்பட்ட “செகராசசேகர வைத்தியத் திறவுகோல்” எனும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
“ஆரணமறைக்குமெட்டா அருளொளியான மூர்த்தி
பூரணமறையாயந்நாட் புகன்றவாயுறு வேதத்தின்
சீரணிவாதமெண்பத் தைந்த்தின் சிறப்பும்பேரும்
ஏரணியுலகின்மீது அறிந்தவையியம் பலுற்றாம்”
வேதங்களால் கண்டறிய முடியாத அருள் ஒளிமயமான சிவன் முன்நாளில் கூறிய ஐந்தாம் வேதம் என்று போற்றக் கூடிய ஆயுள்வேதத்தில் கூறியபடி வாதரோகம் எண்பத்தைந்தாகும். இவற்றின் சிறப்புக்களையும் தன்மைகளையும் இந்த உலக மக்களின் நன்மைகருதி அவற்றைச் சொல்லிடுவோம்.
தொடரும்………..
No comments:
Post a Comment