04.நேத்திர வாதம்.
“கண்ணிற்கடுத்துக் குத்திக் கலங்கி நீர்சிவந்து
வீழ்ந்து
நண்ணியமுகமுமூக்கும் நயனமும் புறத்தேவாங்கும்
பண்ணிகர் மொழியாற்சற்றே பகர்தலைவலியுமுண்டாம்
எண்ணிநேத்திரவாதத்தின் குணமிதென்றியம்பினாரே”
கண்கள்
கடுத்துக்குத்தும், சிவந்து கலங்கி கண்ணீர் வடியும், முகம், மூக்கு கண்ணும் புறத்தில்
வலிக்கும். தலைவலியும் உண்டாகும் இவையாவும் நேத்திர வாதகுணங்களாகும் என வைத்திய அறிஞர்
இயம்பினார்கள் என்பதை பண்ணினை ஒத்த மொழிபேசும் பாவையே அறிக.
“ஒளிநிறைவிழியிற்குத்தோ டுடன்தலைவலியுண்டாகி
வளமிகுகண்பஞ்சாடி மறைந்து நீர்கடுத்துவீழும்
அளிநிறைகுழலாய் பின்னு மம்பகஞ் சுழித்துவாங்கும்
குளிருநேத்திரவாதத்தின் குணமிதென்றியம்பினாரே.”
ஒளி
விளங்குங்கண்களில் குத்துண்டாகும். தலைவலி ஏற்படும், கண் மின்னும், பார்வை தெளிவில்லாது
கலக்கமாயிருக்கும், கண்கள் கடுத்து கண்ணீர் வரும், கண்களின் பக்கங்களில் வலியுடன் வாங்கல்
ஏற்படும் நேத்திர வாதத்தின் குணங்கள். இவையும் என எடுத்துரைத்தனர் என்பதை வண்டு மொய்க்கும்
கூந்தலையுடைய பெண்ணே இதனை அறிந்துகொள்.
நேத்திர
வாதத்துக்கு மருந்துகள்
தொடரும்…….
No comments:
Post a Comment