சிறுநீரக நோய்கள்
– Renal Diseases - 01
தற்பொழுது
யாழில் சிறுநீரக நோய்கள் பொதுவானதொரு நோய்களாக மட்டுமன்றி, சிறுநீரகம் தொழிற்பாடற்று
ஏற்படும் இறப்புக்களும் அதிகரித்து வரும் நிலை காணப்படுகின்றது. தவிர நாம் பயன்படுத்தும்
குடிநீர்களின் நச்சுத்தன்மையும் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக நாம் குடிநீராக பயன்படுத்தும்
நிலத்தடி நீரில் “நைற்ரேட்” இன் செறிவு அதிகரித்து (high concentration of Nitrate ( NO3- )) உள்ளதாக பல ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. நாம் நிலத்தடி
நீரில் எவ்வளவு அக்கறையாக உள்ளோம் என்பதற்கு சுன்னாகம் எண்ணெய்க் கசிவும் அதிகரித்து
வரும் குழாய்க் கிணறுகளின் எண்ணிக்கைகளும் சிறந்த உதாரணமாகும்.
இவ்வாறான நிலையில்
ஏற்படும் சிறுநீரக நோய்களை சித்த மருத்துவம் எவ்வாறு பார்க்கின்றது என்பதை பார்ப்போம்.
சித்த மருத்துவம் .இதனை மூன்று பிரிவுகளாகப் பிரத்துள்ளது.
01. நீர் அருகல் நோய்கள்: இதில் கல்லடைப்பு, நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, சொட்டு நீர், வெள்ளை, நீரடைப்பு என ஆறு வகைகளாக
கூறப்பட்டுள்ளன.
02. நீர் பெருக்கல் நோய்கள்:
இதில் மேக நீர் இருபது பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.
03. மேற்கூறிய
இரு பெரும் பிரிவுகள் நீங்கலாக நீரிழிவு, வெண்ணீர்,
தெளிநீர் என்னும் தலைப்புக்களில் தனியாகவும் விளக்கியுள்ளனர். இவை மேக நீர் இருபதிலும்
அடங்கியுள்ளன.
01. கல்லடைப்பு
இந்நோய் நிலையில் அதிக நீர் அருந்துவதுடன், நீரைப்பெருக்கி நீர்ப்பையை
கழுவுவது போன்று சிறு கற்களை வெளியாக்கிச் சிறுநீரைப் பெருக்கக் கூடிய உணவுகளைக் கொடுத்தல்
வேண்டும். முள்ளங்கிக் கீரைத்தண்டு, வாழைத்தண்டு, சிறு கீரை, அவரை, வெண்டை, பசலைக்கீரை,
தாளிக்கீரை, பார்லியரிசி, மாவிலங்கம்பட்டை, சிறுபீளை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
கற்களை உண்டாக்கக்கூடிய தக்காளி, கோவா, கோலிபிளவர், முருக்கங்காய், மற்றும் உப்பு கல்சியம்
செறிவான நீர்களைப் பருகுதல் கூடாது.
No comments:
Post a Comment