Sunday, June 20, 2021

அனைவருக்கும் சர்வதேச யோகா தின #வாழ்த்துகளுடன் கூடிய #கோரிக்கை.

தமிழரின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்திருந்த யோக பயிற்சிகள் இன்று பெரும்பாலும் யோகா தினத்துடன் நின்றுவிடுகின்றது. 

கல்வித் திணைக்களங்கள் 

பரதநாட்டியம், 

சித்திரம், 

சங்கீதம் 

போன்ற கலைகளுடன் #யோகாவையும்  #பாடவிதானங்களுடன் #இணைப்பதன் மூலம் உடல் உள ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கிடலாம்.

Friday, June 18, 2021

தொப்பை குறைய என்ன தடைகள்?

அதிகப்படியான மாப்பொருள் உணவுகள், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளே தொப்பை உருவாகவும், குறைக்க முடியாமைக்குமான பிரதான காரணங்களாகும். 

எனவே உணவுகளை உண்ணும்போது அளவோடு மாப்பொருள் உணவுகளை உண்ணுவது நன்று, நார்ச்சத்து நிறைந்த மாப்பொருள் உணவுகள், மரக்கறி வகைகளை கூடுதலாக பயன்படுத்தல் வேண்டும்.

வெளிற்றப்பட்ட, நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்ட சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் கோதுமை மா - அதுசார்ந்த உணவுகள் (முக்கியமாக பேக்கரி உணவுகள் அனைத்தும். இவற்றில் மறைமுகமாக மிகக் கெட்டகொழுப்பு (Transfatty acid) வேறு காணப்படுகின்றது)

மற்றும் சீனி - அது சார்ந்த உணவுகள், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் என்பனவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இவற்றுடன் கெட்ட கொழுப்புக்களைக் கொண்ட தோலுடன் கூடிய இறைச்சி வகைகள், உறுப்புக்கள், திண்ம கொழுப்புக்கள் என்பவற்றை அதிகப்படியாக உள்ளெடுத்தல் என்பனவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தனி இறைச்சி (Lean meat), கடல் உணவுகள் சிறந்தன. கடல் உணவுகளில் நிறைவாக நல்ல கொழுப்புக்களே காணப்படுகின்றன. அதேபோல

 எண்ணெய்கொள் விதைகளிலும் (Nuts) அப்படியே. எனவே இவற்றை அளவோடுஉட்கொள்ளலாம்.


தொப்பை என்பது மேற்படி பாதகமான உணவுகள் மூலம் உடலுக்கு மேலதிகமாக கிடைக்கின்ற கொழுப்புக்கள் வயிற்றுப்புற தோலின் கீழும் (Subcutaneous fat), தசைகளின் கீழ் உட்புற உற்புற உறுப்புக்களைச் சுற்றியும் (Visceral fat) படிகின்றன. உட்புற உறுப்புக்களைச் சுற்றி படியும் கொழுப்புக்கள் இதயநோய்கள், சலரோகம், அதிகுருதி அழுத்தம் போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன. 

எனவே தொப்பையை குறைப்பது பல நோய்களை

புகைப்பிடித்தல்  உடலின் உட்புற உறுப்பக்களில் கொழுப்புப் (Visceral fat)  படிவதை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

மனஅழுத்தம் ஏற்படும்போது உடலில் Cortisol எனப்படும் ஓமோன் அதிகரிப்பினால் கொழுப்பு வயிற்றுப்பகுதியில் படிவதன் மூலம் தொப்பை உருவாகின்றது. இதற்கு யோகா, தியானம் போன்ற உடல்உள பயிற்சிகள் மனஅழுத்தத்தைக் குறைக்கவும், மேலதிக கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன.

இவ்வாறான நிலையில்  மருத்துவர் ஒருவரின் உதவியுடன் யோகாவினை மேறகொள்வது நன்று.

யோக பயிற்சி, உடற்பயிற்சி மூலம் தொப்பையை குறைப்பது இலகுவான காரியமன்று. ஓர் ஆணில் 40 inch இற்கு மேற்பட்ட இடுப்பு சுற்றளவும், பெண்ணில் 35 inch இற்கு மேற்பட்ட இடுப்பு சுற்றளவும் இருப்பின் சாதரணமான உடற்பயிற்சியின் நேரம் 21/2 மணித்தியாலங்கள் தினமும் தேவை. கயறு அடித்தல் போன்ற பயிற்சி எனின் குறைந்தது ஒருநாளைக்கு 1 மணித்தியாலங்கள்  தேவை. அதைவிட பொறுமையும், வாயைக்கட்டுதலும் அவசியம். இதற்கான உடற்பயிற்சியானது காற்றோட்டமான இடத்தில் (Aerobic exercise) செய்தல் வேண்டும்.

இவையாவும் மருத்துவர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்வது அவசியம். 

மென்பானங்கள், மதுவகைகள்  தொப்பை வேகமாக அதிகரிக்கக் கூடியன. இவை ஆரோக்கியத்தின் சத்துருக்கள்.

தாராளமாக நீர் அருந்துதல் தொப்பையை குறைக்கும். ஒருவரது நிறையை (kg) 30 ஆல் பிரித்தால் வரும் தொகைக்கு (Litterஇல்) ஏற்ப ஒரு நாளைக்கு நீர் அருந்துதல் வேண்டும். 

பரம்பரை உடலமைப்பு முக்கியம். பரம்பரையாக பருத்த உடலமைப்பு எனின் அதிகம் கவனம் எடுத்தல் வேண்டும். 

அகால வேளையில் நித்திரை முழித்தல், தொப்பையின் சிறந்த நண்பன். எனவே இரவு 9 -10 இற்குள் நித்திரைக்கு செல்வதை வழக்கமாக கொள்ளவேண்டும். இரவு உணவு உண்டுவதை பி.ப 6 - இரவு 9 இற்குள் அமைத்தலுடன் இரவு  உண்டபின் குறைந்தது 100 அடி நடத்தல் வேண்டும்.

இவற்றை கடைப்பிடிக்கும்போது உடலின் நிறையை, இடுப்புச் சுற்றளவு என்பவற்றை அவதானித்து செயற்படல் வேண்டும்.

Wednesday, June 16, 2021

நரைமுடி Gray hair

மிகப்பெரிய மன அழுத்தத்தைத் தரக்கூடிய ஒன்றாக காணப்படுகின்ற விடயங்களில் ஒன்று நரைமுடி. இன்று இளையோர் மத்தியில் மட்டுமல்லாது பல வயதினரும் உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் மட்டுமல்லாது ஆண்கள் கூட பாதிக்கப்படவே செய்கின்றனர்.  

"Pepper and salt style" என்று நினைப்பதற்கு முன்னரே பலருக்கு Pepper காணாமல் போய்விடுகின்றது.

நரையின் விஞ்ஞானம்

மயிர்க் கலங்களில் (Hair follicles) உள்ள மெலனின் (Melenin) எனப்படும் இரசாயணப்பொருளே தலைமயிரின் கறுப்பு நிறத்துக்கு காரணமாகின்றது. 

வயதுடன் இக்கலங்கள் இறக்கும்போது தொடர்ந்து வளரும் தலைமயிர்கள் பழுப்பாகவோ, வெள்ளையாகவோ வளர ஆரம்பிக்கின்றன. 

ஒருபோதும் நரைத்தமயிர் கறுப்பாக மாற்றமுடியாது. சித்த மருத்துவத்தில் ஆரம்ப கட்டத்திலேயே  தலைக்கான சில எண்ணெய் வகைகள் வைப்பதன் மூலம், காயகல்ப  முறையில்   சிகிச்சை மேற்கொள்ளும்போது மேலும் மயிர்க்கலங்கள் இறப்பது குறைக்கலாம் அல்லது  பிற்போடலாம். 

அல்லது தினமும் தமிழர் பாரம்பரிய முறையில் தலைக்கு எண்ணெய் வைத்தல், தலைமுழுகும்போது எண்ணெய்வைத்து முழுகுதல் (சனி நீராடு) என்பனவற்றை கடைப்பிடித்தல். தேவையற்ற இரசாயனங்கள் சேரந்த Shamboo  வகைகளைத் தவிர்த்தல் வேண்டும். 

பொதுவாக தலைமயிர் நரைப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணகர்த்தா நமது பரம்பரை அலகுதான். பரம்பரை அலகுதான் எவ்வளவு விரைவாக நரைதோன்றலாம் எவ்வளவு வேகமாக தோன்றலாம் என்பதைத தீர்மானிக்கின்றது. பெற்றோர்களுக்கு விரைவாக நரைத்திருந்தால் பிள்ளைகளுக்கும் அதுவே. 

பொதுவாக ஆசிய நாட்டவர்களுக்கு 40 வயதை அண்மிக்கும்போது நரை விழத்தொடங்குகின்றது. இது சிலருக்கு 20, 25 இலும் நடக்கின்றது. 

நரை உருவாக பரம்பரை அலகைவிட வேறு காரணங்கள்.

1. Vitamin B12 குறைபாடு. 

2. தைரொக்சின் குறைபாடு

3. Vitiligo - வெண்குஸ்டம் நோய் நிலையில் 

4. மிகவும் அரிதாக சில புற்றுநோய் நிலைகள்

5. மனஅழுத்தம் வழமையைவிட 3 மடங்கு நரை தோன்றுவதை வேகமாக்குகின்றது.

6. புகைப்பழக்கம் 21/2 மடங்கு நரை தோன்றுவதை வேகமாக்குகின்றது.

7. நரை மயிரை பிடுங்கும்போது மயிர்க்கலங்கள் சிதைவடைகின்றன. அத்துடன் மீண்டும் நரை மயிரே வளர்வதுடன் அவற்றின் வளர்ச்சியும் நீண்டதாக இராது.

இயன்றவரை சாயம் பூசுவதைத் தவிருங்கள், இரசாயனங்கள் குறைந்த இயற்கை தலைமுடி கசாயங்களைப் பாவியுங்கள். 

எனவே வருமுன் காப்போம்.

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.