அதிகப்படியான மாப்பொருள் உணவுகள், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளே தொப்பை உருவாகவும், குறைக்க முடியாமைக்குமான பிரதான காரணங்களாகும்.
எனவே உணவுகளை உண்ணும்போது அளவோடு மாப்பொருள் உணவுகளை உண்ணுவது நன்று, நார்ச்சத்து நிறைந்த மாப்பொருள் உணவுகள், மரக்கறி வகைகளை கூடுதலாக பயன்படுத்தல் வேண்டும்.
வெளிற்றப்பட்ட, நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்ட சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் கோதுமை மா - அதுசார்ந்த உணவுகள் (முக்கியமாக பேக்கரி உணவுகள் அனைத்தும். இவற்றில் மறைமுகமாக மிகக் கெட்டகொழுப்பு (Transfatty acid) வேறு காணப்படுகின்றது)
மற்றும் சீனி - அது சார்ந்த உணவுகள், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் என்பனவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இவற்றுடன் கெட்ட கொழுப்புக்களைக் கொண்ட தோலுடன் கூடிய இறைச்சி வகைகள், உறுப்புக்கள், திண்ம கொழுப்புக்கள் என்பவற்றை அதிகப்படியாக உள்ளெடுத்தல் என்பனவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தனி இறைச்சி (Lean meat), கடல் உணவுகள் சிறந்தன. கடல் உணவுகளில் நிறைவாக நல்ல கொழுப்புக்களே காணப்படுகின்றன. அதேபோல
எண்ணெய்கொள் விதைகளிலும் (Nuts) அப்படியே. எனவே இவற்றை அளவோடுஉட்கொள்ளலாம்.
தொப்பை என்பது மேற்படி பாதகமான உணவுகள் மூலம் உடலுக்கு மேலதிகமாக கிடைக்கின்ற கொழுப்புக்கள் வயிற்றுப்புற தோலின் கீழும் (Subcutaneous fat), தசைகளின் கீழ் உட்புற உற்புற உறுப்புக்களைச் சுற்றியும் (Visceral fat) படிகின்றன. உட்புற உறுப்புக்களைச் சுற்றி படியும் கொழுப்புக்கள் இதயநோய்கள், சலரோகம், அதிகுருதி அழுத்தம் போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.
எனவே தொப்பையை குறைப்பது பல நோய்களை
புகைப்பிடித்தல் உடலின் உட்புற உறுப்பக்களில் கொழுப்புப் (Visceral fat) படிவதை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மனஅழுத்தம் ஏற்படும்போது உடலில் Cortisol எனப்படும் ஓமோன் அதிகரிப்பினால் கொழுப்பு வயிற்றுப்பகுதியில் படிவதன் மூலம் தொப்பை உருவாகின்றது. இதற்கு யோகா, தியானம் போன்ற உடல்உள பயிற்சிகள் மனஅழுத்தத்தைக் குறைக்கவும், மேலதிக கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன.
இவ்வாறான நிலையில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் யோகாவினை மேறகொள்வது நன்று.
யோக பயிற்சி, உடற்பயிற்சி மூலம் தொப்பையை குறைப்பது இலகுவான காரியமன்று. ஓர் ஆணில் 40 inch இற்கு மேற்பட்ட இடுப்பு சுற்றளவும், பெண்ணில் 35 inch இற்கு மேற்பட்ட இடுப்பு சுற்றளவும் இருப்பின் சாதரணமான உடற்பயிற்சியின் நேரம் 21/2 மணித்தியாலங்கள் தினமும் தேவை. கயறு அடித்தல் போன்ற பயிற்சி எனின் குறைந்தது ஒருநாளைக்கு 1 மணித்தியாலங்கள் தேவை. அதைவிட பொறுமையும், வாயைக்கட்டுதலும் அவசியம். இதற்கான உடற்பயிற்சியானது காற்றோட்டமான இடத்தில் (Aerobic exercise) செய்தல் வேண்டும்.
இவையாவும் மருத்துவர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்வது அவசியம்.
மென்பானங்கள், மதுவகைகள் தொப்பை வேகமாக அதிகரிக்கக் கூடியன. இவை ஆரோக்கியத்தின் சத்துருக்கள்.
தாராளமாக நீர் அருந்துதல் தொப்பையை குறைக்கும். ஒருவரது நிறையை (kg) 30 ஆல் பிரித்தால் வரும் தொகைக்கு (Litterஇல்) ஏற்ப ஒரு நாளைக்கு நீர் அருந்துதல் வேண்டும்.
பரம்பரை உடலமைப்பு முக்கியம். பரம்பரையாக பருத்த உடலமைப்பு எனின் அதிகம் கவனம் எடுத்தல் வேண்டும்.
அகால வேளையில் நித்திரை முழித்தல், தொப்பையின் சிறந்த நண்பன். எனவே இரவு 9 -10 இற்குள் நித்திரைக்கு செல்வதை வழக்கமாக கொள்ளவேண்டும். இரவு உணவு உண்டுவதை பி.ப 6 - இரவு 9 இற்குள் அமைத்தலுடன் இரவு உண்டபின் குறைந்தது 100 அடி நடத்தல் வேண்டும்.
இவற்றை கடைப்பிடிக்கும்போது உடலின் நிறையை, இடுப்புச் சுற்றளவு என்பவற்றை அவதானித்து செயற்படல் வேண்டும்.
No comments:
Post a Comment