Wednesday, June 16, 2021

நரைமுடி Gray hair

மிகப்பெரிய மன அழுத்தத்தைத் தரக்கூடிய ஒன்றாக காணப்படுகின்ற விடயங்களில் ஒன்று நரைமுடி. இன்று இளையோர் மத்தியில் மட்டுமல்லாது பல வயதினரும் உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் மட்டுமல்லாது ஆண்கள் கூட பாதிக்கப்படவே செய்கின்றனர்.  

"Pepper and salt style" என்று நினைப்பதற்கு முன்னரே பலருக்கு Pepper காணாமல் போய்விடுகின்றது.

நரையின் விஞ்ஞானம்

மயிர்க் கலங்களில் (Hair follicles) உள்ள மெலனின் (Melenin) எனப்படும் இரசாயணப்பொருளே தலைமயிரின் கறுப்பு நிறத்துக்கு காரணமாகின்றது. 

வயதுடன் இக்கலங்கள் இறக்கும்போது தொடர்ந்து வளரும் தலைமயிர்கள் பழுப்பாகவோ, வெள்ளையாகவோ வளர ஆரம்பிக்கின்றன. 

ஒருபோதும் நரைத்தமயிர் கறுப்பாக மாற்றமுடியாது. சித்த மருத்துவத்தில் ஆரம்ப கட்டத்திலேயே  தலைக்கான சில எண்ணெய் வகைகள் வைப்பதன் மூலம், காயகல்ப  முறையில்   சிகிச்சை மேற்கொள்ளும்போது மேலும் மயிர்க்கலங்கள் இறப்பது குறைக்கலாம் அல்லது  பிற்போடலாம். 

அல்லது தினமும் தமிழர் பாரம்பரிய முறையில் தலைக்கு எண்ணெய் வைத்தல், தலைமுழுகும்போது எண்ணெய்வைத்து முழுகுதல் (சனி நீராடு) என்பனவற்றை கடைப்பிடித்தல். தேவையற்ற இரசாயனங்கள் சேரந்த Shamboo  வகைகளைத் தவிர்த்தல் வேண்டும். 

பொதுவாக தலைமயிர் நரைப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணகர்த்தா நமது பரம்பரை அலகுதான். பரம்பரை அலகுதான் எவ்வளவு விரைவாக நரைதோன்றலாம் எவ்வளவு வேகமாக தோன்றலாம் என்பதைத தீர்மானிக்கின்றது. பெற்றோர்களுக்கு விரைவாக நரைத்திருந்தால் பிள்ளைகளுக்கும் அதுவே. 

பொதுவாக ஆசிய நாட்டவர்களுக்கு 40 வயதை அண்மிக்கும்போது நரை விழத்தொடங்குகின்றது. இது சிலருக்கு 20, 25 இலும் நடக்கின்றது. 

நரை உருவாக பரம்பரை அலகைவிட வேறு காரணங்கள்.

1. Vitamin B12 குறைபாடு. 

2. தைரொக்சின் குறைபாடு

3. Vitiligo - வெண்குஸ்டம் நோய் நிலையில் 

4. மிகவும் அரிதாக சில புற்றுநோய் நிலைகள்

5. மனஅழுத்தம் வழமையைவிட 3 மடங்கு நரை தோன்றுவதை வேகமாக்குகின்றது.

6. புகைப்பழக்கம் 21/2 மடங்கு நரை தோன்றுவதை வேகமாக்குகின்றது.

7. நரை மயிரை பிடுங்கும்போது மயிர்க்கலங்கள் சிதைவடைகின்றன. அத்துடன் மீண்டும் நரை மயிரே வளர்வதுடன் அவற்றின் வளர்ச்சியும் நீண்டதாக இராது.

இயன்றவரை சாயம் பூசுவதைத் தவிருங்கள், இரசாயனங்கள் குறைந்த இயற்கை தலைமுடி கசாயங்களைப் பாவியுங்கள். 

எனவே வருமுன் காப்போம்.

No comments:

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.