கொரனா ஆனது பெருந்தொற்று மட்டுமல்ல மிகநீண்ட காலத் தொற்றாகவும் மக்களை அச்சுறுத்தி வருகின்றது. தொடர்ந்து இக்காலத்தில் வாழ வேண்டுமென்றால்,
1. சமூக இடைவெளி
2. முகக்கவசம்
3. கைகளை சவர்க்காரமிட்டு கழுவுதல்
4. தொற்றுநீக்கி திரவத்தினை (Sanitizer) பயன்படுத்தல்
5. தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளல்
போன்ற
சுகாதார நடைமுறைகளை அவசியம் கைக்கொள்ள வேண்டும். ஆனால் இவையாவற்றையும் சரிவர முறையாக
சமூகத்தில் உள்ள அனைவரும் முறையாக கடைப்பிடிக்கும்போதுதான் நூறு வீத பலனடைய முடியும்.
எம்மைத்
தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் முக்கியமாக எமது உடல் ஆரோக்கியமாக இருத்தல்
வேண்டும். நோயுடன் போராடக்கூடிய திறனுடன் இருத்தல் வேண்டும். இதற்கு சரியான உணவும்,
உணவுப் பழக்கவழக்கங்களையும், சரியான உடற்பயிற்சிகளையும் கைக்கொள்ள வேண்டும்.
சரியான
உணவு எனும்போது ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதசமனாக அமைதல் வேண்டும். சித்தமருத்துவத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள ஏழு உடற் கட்டமைப்புக்கள் ஆன சாரம் (Serum), செந்நீர்
(Blood), தசை (Muscle), மூளை Brain), என்பு (Bone), கொழுப்பு (Fat), வெண்ணீர்
(Sperm) அல்லது முட்டை (Ovum) என்பன ஆரோக்கியமானவையாக இருத்தல் வேண்டும்.
இவற்றில்
ஏதேனும் ஒன்று பலவீனமாக இருந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியானது பலவீனமாகவே காணப்படும்.
மருந்துகள் முறையாக கண்டுபிடிக்க முடியாத கொரனா போன்ற நோய்நிலைகளில் உடலின் நோய் எதிர்ப்பு
மண்டலமே நோயிலிருந்து எம்மைக்காப்பாற்றக்கூடியது.
உணவே
மருந்து, மருந்தே உணவு என்பதற்கு அமைய இவ் நோய் எதிர்ப்பு சக்திக்கு உணவும் உணவுப்பழக்கவழக்கங்களும்
நோய்க்கு மருந்தாக அமைகின்றன. முக்கியமான உணவுப்பொருட்களில் உள்ள தாவர இரசாயனங்கள்
(Phytochemicals – Secondary Nutrition) முக்கிய பங்காற்றுகின்றன.
உணவின்
முதல் நிலைச் சத்துக்களான (Primary Nutrition) மாப்பொருள், புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துக்கள்,
கனிமங்கள் என்பன உடலுக்கு தேவையான சக்தி, உடல் வளர்ச்சி, உடல் அனுசேபத் தொழிற்பாடுகளை
ஒழுங்காக்குதல் என்பவற்றுக்கும் சில உயிர்ச்சத்துக்கள் வளர்சிதை மாற்றங்களைத் தடுப்பதிலும்
(Antioxidants) உதவுகின்றன.
இவ்வாறான
செயற்பாடுகளுக்கு உடலில் ஆதாரமாக அமைவது நீர் ஆகும். எனவே போதுமான அளவு நீர் பருகுதல்
வேண்டும். தாகத்தை உணரமுன் தேவையான நீரினை பருகுதல் நன்று. பொதுவாக 1.5 லீற்றர் –
2 லீற்றர் வரை பருகுதல் வேண்டும். நன்றாக கொதிக்க வைத்த நீர் போதுமானது.
உணவில்,
முக்கியமாக தாவர உணவில் உள்ள இரண்டாம் நிலைச்சத்துகள் (Secondary Nutrition) ஆன தாவர
இரசாயனங்கள் நோயெதிர்ப்பு சக்தியைத் தரக்கூடியனவாகவும், நோயின்போது கிருமிகளை அழிக்கக்
கூடியனவாகவும், கிருமித்தொற்றுக்களால் ஏற்படும் உடல் சிதைவுகளை விரைவாக குணமாக்கக்
கூடியனவாகவும் இது போன்று பல்வேறு மருத்துவ குணமுடையனவாகவும் காணப்பட்டு உடலை நோய்களால்
பாதிக்காவண்ணம் தடுக்கின்றன. இவ்வாறான தாவர இரசாயனங்களே சித்தமருத்துவத்தில் மருந்தாகவும்
பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறான
விடயங்களைக் கருத்திற் கொண்டு உணவுகளை உண்ணும் பொழுது, உண்ணும் சிறுபொழுதுகள் (காலை,
மதியம், இரவு …. ), பருவ காலங்களையும் கருத்தில் கொண்டு உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.
உதாரணமாக
சிறுபொழுதுகளைக் கருத்திற் கொள்ளும் பொழுது,
1. காலை உணவில் – பயறு, கடலை, துவரை, உழுந்து
போன்ற அவரையின பொருட்கள், எள்ளு, என்பனவற்றை பிரதானமாகவும்,கடுகு, மிளகு, வேர்க்கொம்பு,
பெருங்காயம் போன்றவற்றை அதிகமாகவும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
2. மதிய உணவில் – கிழங்கு, கீரை, இலைவகைகள்,
பழவகைகள், பால்சார் உணவுகள், மாமிச வகைகள் பிரதானமாக சேர்க்க வேண்டும்.
3. இரவு உணவில் – பால், துவரம் பருப்பு, கண்டங்கத்தரி,
தூதுவளை, சுண்டங்கத்தரி, பிஞ்சு மரக்கறிகள் என்பன சேர்த்தல் வேண்டும்.
இதேபோல்
பாரம்பரியமாக கைக்கொள்ளப்படும் பருவகால உணவுகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும். ஏனெனில்
பருவகாலங்களில் ஏற்படும் உடற்பலவீனங்களை பருவகால உணவுகள் சீர்செய்யக்கூடியன.
எக்காலத்திலும்
உடலில் ஏற்படும் சமநிலைக்குழப்பங்களை சரி செய்து நோயின்றி வாழ பின்வரும் முக்குற்றசம
திரவியங்களை உணவுடன் முறைப்படி சேர்த்துக்கொள்ளல் வேண்டும்.
1. ஏலம்
2. மஞ்சள்
3. சீரகம்
4. பெருங்காயம்
5. வேர்க்கொம்பு அல்லது இஞ்சி
6. வெந்தயம்
7. உள்ளி
8. மிளகு
உணவு உண்ணும்போது கவனிக்க
வேண்டிய விடயங்கள்.
1. நன்கு பசியேற்பட்ட பின்னர் உணவு உட்கொள்ளவேண்டும்.
2. கைகளை நன்கு கழுவிக்கொள்ளல்
3. இறைவனை வணங்குதல்
4. சரியான இருக்கையில் அமர்தல் (உணவினை அவமதிக்காது)
5. வேறு கவனங்கள், சிந்தனைகள் இன்றி உண்ணுதல்
வேண்டும்.
6. அதிக சூடான உணவுகளை உண்ணக்கூடாது.
7. அற்ப சூடுள்ளதாக உணவு இருத்தல் வேண்டும்.
8. உண்ணமுன் தொண்டைசிறிது நனைக்க சிறிது நீர்,
உணவின் மத்தியில் நீர் அருந்துதல் வேண்டும்.
உண்ணும்
உணவுகள் இருக்கவேண்டிய அளவுகள். – ஒரு நாளுக்கானது
1. தானியங்கள் மற்றும் மாச்சத்துள்ள உணவுகள்
– 6 - 11 பரிமாறல் அளவுகள் (Serving size) – 1பரிமாறல் அலகு 200ml குவளை (Cup), பாண்
என்றால் ஒன்பது சமதுண்டுகளாக பிரித்த ஒருபங்கு (50கிராம்).
2. மரக்கறிகள் – 3 – 5 பரிமாறல் அளவு, ஒரு பரிமாறல்
அளவு – சமைத்த மரக்கறிகள் எனின் ½ குவளை, சமைக்காத மரக்கறி எனின் 1 குவளை.
3. புரத உணவுகள் – 3 – 4 பரிமாறல் அளவு, ஒரு
பரிமாறல் அளவு – சமைத்த மாமிச உணவு – 30கிராம், முட்டை - 1, பருப்பு வகை – 3 மேசைகக்கரண்டி, கருவாடு – 15
கிராம். (இவற்றில் ஏதேனும் ஒருவகை ஒரு நளைக்கு).
4. எண்ணெய்கொள் விதைகள் (nuts) – 2 – 4 பரிமாறல்
அளவு. ஒரு பரிமாறல் அளவு – ஒரு மேசைக்கரண்டி – 15 கிரராம்.
5. பால் பால்சார் உணவுகள் – 1 – 2 பரிமாறல்
அளவு, ஒரு பரிமாறல் அளவு பால் எனின் ஒரு குவளை (200ml), தயிர் எனின் 100ml, பால்மா
வகை எனின் 2 மேசைக்கரண்டி (30g).
6. பழங்கள் – 2 – 3 பரிமாறல் அளவு, ஒரு பரிமாறல்
எனின் நடுத்தர அளவுள்ள வாழைப்பழம், தோடமடபழம், வெட்டிய பழங்கள் எனின் ½ குவளை, உலர்
பழங்கள் எனின் இரண்டு மேசைக்கரண்டி.
கொரனா பெருந்தொற்றுக் காலத்தில்
…
1. பரிமாறல் அளவுகளின் கூடுதலான அளவு அல்லது
தேவைக்கேற்ப புரத உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
சைவ உணவுப்பழக்கமுள்ளோர் அதிகம் பயங்கொள்ளத்
தேவையில்லை. ஏனெனில் எமது சைவ உணவுப்பழக்கமானது பால், பால்சார் உணவுகளை கொண்டது. எனவே
இவற்றினை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். பாலில் இருந்து செய்யப்படும் பனீர் சிறந்ததாக
இருக்கும். குறிப்பாக சிறுவர்களுக்கு.
அத்துடன் உழுத்தங்களி சிறந்த புரத உணவாகும்.
2. பழ வகைகள், மரக்கறி, இலைவகைகள் அதிகமாக சேர்த்துக்கொள்ள
வேண்டும். இவை அனைத்தும் சேர்த்து ஒரு நாளைக்கு குறைந்தது கட்டாயமாக 500 கிராம் இருத்தல்
வேண்டும்.
3. உணவில் மேற்குறிப்பிட்ட முக்குற்ற சம திரவியங்கள்
ஆன வேர்க்கொம்பு, பெருங்காயம், மஞ்சள், உள்ளி, மிளகு என்பவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
இவற்றினைப்பயன்படுத்தி இரசம் செய்து சிறிது
சிறிதாக (30ml) அவ்வப்போது பருகுதல் நன்று.
4. நீராகாரங்கள் அதிகம் சோத்துக்கொள்ள வேண்டும்.
பழரசங்களாக, கஞ்சி வகைகளாக உட்கொள்ளுதல் நன்று.
கஞ்சியில் புளிக்கஞ்சி சிறப்பான பலனையளிக்கும்.
5. அதிளவிலான மாப்பொருள் உணவுகள், தனியே கலோரிகள்
கொண்ட உணவுகளைத் தவிர்தல் வேண்டும். பரிமாறல் அளவுகளின் குறைந்த அளவுகளைக் கொள்ளல்
வேண்டும்.
ஆனால் நோயுற்றபோது உடற்தொழிற்பாட்டுக்குத்
தேவையான சக்தியை வழங்கக் கூடியதாக கலோரி அதிகமுள்ள உணவுகளை எடுத்தல் வேண்டும். (இளநீர், குளிர்சாதனப் பெட்டியில்
வைக்காத சோடா வகைகள்)
6. நோய்த்தொற்றுள்ளபோது எந்த உணவானாலும் இலகுவாக
சமிபாடு அடையக்கூடிய உணவுகளாக இருத்தல் வேண்டும். மாமிச உணவுகளில் மீன்வகைகள், முட்டை,
இறைச்சிவகைகள் எனில் இரசமாக (Soup) இருத்தல் நன்று.
7. நோய்த்தொற்றுள்ளபோது களி வகைகளாக, நீராகாரங்களாவே
இருத்தல் நன்று. (கூழ், கஞ்சி வகைகள்)
No comments:
Post a Comment