எனினும் சிறு குறைபாடு காணப்படுகிறது. அவர் உளவியலில் பாண்டித்தியம் பெற்றிருந்தும் உளவியலும் உணவும் எனும் தலைப்பில் சிறிதாக ஆராய்ந்திருக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் உணவின் மூலம் பல உளவியல் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து வருகிறோம். இன்றைய இளம்சமுதாயம் துரித உணவுகளுக்கு அடிமையாகி வரும் காலத்தில் எமக்கு அடுத்த தலைமுறையின் சாவினை பார்க்கும் கடைசித்தலைமுறை நாம் என்ற நிலையில் அதற்கு சிறந்த ஒரு விழிப்புணர்வு கிடைத்திருக்கிறது.
மொத்தத்தில் தம்பி சுதர்மன் அனுபவம். அறிவு.தேடல். களப்பணி என்பவற்றுடன் இப்புத்தகத்தை உணர்ந்து எழதியிருப்பது சிறப்பானது. அட்டைப்படம் நாம் முன்பு பாடசாலையில் படிக்கும் போது கல்யாணவீடா வாழையிலை வடை பாயசத்தோடு சாப்பிட்ட அனுபவம் எமது ஆழ்மனத்தில் இருந்து வருவதை உணர்த்துகிறது.
மொத்தத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் இம்மலர் சித்தமருத்துவ மாணவர்களுக்கு. மருத்துவர்கள். ஆராய்ச்சி மாணவர்கள். என பலருக்கும் பயனுள்ளதாகவும் எமது பிரதேசத்தில் பாட்டி. தாத்தா போன்றோர் வெளிநாட்டிலும். இறந்து போன நிலையியலும் அவர்கள் எம்மோடு இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது.
அன்புடன்
அண்ணன்
மருத்துவர் க. ஶ்ரீதரன்
No comments:
Post a Comment